2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு வழங்கப்படும் நகர்ப்புற வீட்டு வளாகங்களில் இருந்து வாடகை பெறுவது நிறுத்தப்படும் என குறிப்பிட்டார்.
அந்த வீடுகளின் உரிமை குடியிருப்போருக்கே வழங்கப்படும்.
கிராம நிலங்கள் விவசாயிகளின் தனிப்பட்ட உரிமைக்கு வழங்கப்படும். இதன் ஊடாக 20,000 குடும்பங்களுக்கு சொத்து கிடைக்கும்.
இதற்காக 2 பில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
பெருந்தோட்ட வீடுகளை நிர்மாணிப்பதற்கான காணி உரிமைகளை வழங்குவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கையாக 4 பில்லியன் நிதி ஒதுக்கீடு.
மிசவிய வேலை திட்டத்திற்கு 600 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு
Be First to Comment