2024ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை முன்வைத்து உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கடந்த வருடங்களில் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களுக்காக செலவிடப்பட்ட தொகை 60 பில்லியன் ரூபாவாக இருந்த போதிலும், 2024ஆம் ஆண்டில் அது 183 பில்லியன் ரூபா வரை, மூன்று மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அஸ்வெசும பலன்களைப் பெறுவதில் தாமதம் ஏற்படும், தகுதியுள்ள பயனாளிகளுக்கு கடந்த காலத்திலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் கொடுப்பனவுகளை வழங்க நடவடிக்கை.
ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோய் உதவித்தொகை 2,500 ரூபாவினால் அதிகரிக்கப்படும்.
புதிய குடும்பங்கள் பயனாளிகள் பட்டியலில் தாமதமின்றி இணைத்துக்கொள்ள 6 மாதங்களுக்கு ஒரு முறை, அஸ்வெசும பயனாளிகளின் பட்டியல் மதிப்பாய்வு செய்யப்படும்.
அஸ்வெசும வேலைத்திட்டம், ஊனமுற்றோர்கள், சிறுநீரக நோயாளிகள் மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளுக்காக 2024 இல் ஒதுக்கப்படும் தொகை, 205 பில்லியன் ரூபா வரை அதிகரிக்கப்படும்.
கடந்த காலத்தில் நெருக்கடியை எதிர்கொண்ட சிறு மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களை மேம்படுத்தும் திட்டத்தை வலுப்படுத்த 30 பில்லியன் ரூபா சலுகைக் கடன் வசதி வழங்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்தார்.
Be First to Comment