வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இன்று (14) அதிகாலை மரம் முறிந்து வீழ்ந்தமையினால் வவுனியா – மன்னார் பிரதான வீதியின் போக்குவரத்து பாதிப்படைந்திருந்தது.
மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக நிலவி வரும் சீரற்ற வானிலையினால் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக வவுனியா – மன்னார் பிரதான வீதி வேப்பங்குளம் பகுதியில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் அப்பகுதியூடான போக்குவரத்து பகுதியளவில் பாதிப்படைந்தது.
அதன் பின்னர் சில மணித்தியாலங்களின் பின்னர் பொதுமக்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினரின் உதவியுடன் மரம் அகற்றப்பட்டமையினையடுத்து போக்குவரத்து வழமைக்கு திரும்பியது
Be First to Comment