வட்டுக்கோட்டை – முதலிகோவிலடி பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்ற திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டிலிருந்து சுமார் 8 பவுண் தங்கநகை காணாமல்போயிருந்த நிலையில் சம்பவம் தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு வழங்கப்பட்டிருந்தது.
அதனடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் அதே பகுதியை சேர்ந்த 30 வயதான சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளதுடன் கைதான சந்தேகநபரிடமிருந்து தாலி கொடி ஒன்றை மீட்டுள்ளனர்.
Be First to Comment