எமது நாட்டை உற்பத்தி பொருளாதாரம் நோக்கிக் கொண்டு செல்வதற்கென ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்களுக்கனெ சுமார் 30 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளமை வரவேற்கத்தக்கது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமும் கடற்றொழில் அமைச்சரமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்
2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் தொடர்பில் தனது கருத்துக்களை முன்வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –
அந்த வகையில் இந்த நாட்டுக்கு பெரும் வருவாயினையும், அந்நியச் செலாவணியினையும், நாட்டு மக்களின் போசாக்கு வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பினையும் ஆற்றி வருகின்ற கடற்றொழிலாளர்களது கடற்றொழில் முயற்சிகளையும் இதனுடன் இணைத்து முன்னெடுப்பதற்கான திட்டமும் எம்மிடம் உள்ளது என்பதையும், இது குறித்த முன்மொழிவினை நான் ஜனாதிபதி அவர்களிடம் கையளித்துள்ளேன் என்பதையும் நான் இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் .
அதேபோன்று கைத்தொழில் துறை தொடர்பில் தற்போது மாகாண சபைகளுக்கு இருக்கின்ற அதிகாரமானது 4 மில்லியன் ரூபாவுக்குக் குறைந்த கைத்தொழில் துறை சார்ந்த முயற்சிகளை முன்னெடுப்பது என்ற நிலைமையை மாற்றி, வருடாந்த சுற்றுத் தொகை 600 மில்லியன் ரூபா வரையில் அதனை அதிகரித்திருப்பது, மாகாண மட்டத்தில் தொழிற்பயிற்சி நிறுவனங்களை அமைப்பது போன்ற விடயங்கள் வரவேற்கத் தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment