Press "Enter" to skip to content

மனைவியை வெருட்ட தற்கொலை நாடகமாட மரத்தில் ஏறியவர் தவறுதலாக துாக்கு மாட்டி பலி!! நடந்தது என்ன?

தூக்கில் தொங்குவது போன்று மனைவிக்குப் பாசாங்கு செய்தவர் மரக் கிளை முறிந்தமையால் உயிரிழந்த சம்பவம் நெடுந்தீவில் இடம்பெற்றுள்ளது.

இரு பிள்ளைகளின் தந்தையான 26 வயதுடைய நபரே நேற்று இவ்வாறு உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

நெடுந்தீவுப் பகுதியில் வசிக்கும் இளம் குடும்பஸ்தர் ஒருவர் மனைவியுடன் பேசியவாறு தான் தற்கொலை செய்வேன் என வேப்பமரத்தில் தூக்கிட்டு பாசாங்கு செய்த வேளை மனைவி அதனைக் கண்ணுற்று எள்ளி நகையாடியுள்ளார்.

இதனால் அந்தக் குடும்பஸ்தர் தூக்கை மாட்டியவாறு மரத்தில் இருந்து கீழே இறங்க முற்பட்ட வேளை வேப்ப மரக் கிளை முறிந்துள்ளது. அந்தக் குடும்பஸ்தரும் உண்மையிலேயே தூக்கில் அகப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் அதில் இருந்த தப்ப முடியாது தவித்த வேளை அவரைக் காக்கும் நோக்கில் மனைவி காலைப் பிடித்தவாறு அவலக் குரல் எழுப்பியபோதும் அருகில் எவருமே இல்லாத நிலையில் உடன் எவரும் அவ்விடத்துக்குச் செல்லவில்லை. இந்நிலையில், குடும்பஸ்தர் அந்த இடத்திலேயே பரிதாபகரமாக உயிரிழந்தார்.

அவரது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் மனைவியிடம் ஒப்படைக்கப்பட்டது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *