இந்த ஆண்டுக்கான அகில இலங்கை ரீதியில் நடத்தப்பட்ட நடனப் போட்டியில் யாழ்ப்பாணம் இளவாலை கன்னியர் மடம் மாகா வித்தியாலயம் முதலிடத்தை சுவீகரித்துள்ளது.
புத்தாக்கம், சுதந்திரம் எனும் தொனிப்பொருளிலான நடனம் முதலிடத்தை சுவீகரித்துள்ளது.
இதில் மாணவிகள் சோ. அபிசாயினி, யூ. சலோமியா மரிய தர்ஷனா, ச. கபினஜா, நி. மடோனா, சி. சாமந்தி, ரா.சஞ்சிதா, அ. லிபின்சியா, த.ஜெயஷாலினி ஆகியோர் இந்த நடனத்தில் பங்கேற்றிருந்தனர்.
அத்துடன் ஆசிரியர்கள் மலர்விழி பிரேம்குமார், யுகந்தினி பாலசுப்ரமணியம் ஆகியோரின் நெறியாள்கையில் குறித்த நடனம் இடம்பெற்றிருந்தது.
இதனிடையே கடந்த வருடமும் தேசிய ரீதியில் இடம்பெற்ற நடனப்போட்டியில் யாழ்ப்பாணம் இளவாலை கன்னியர் மடம் மாகா வித்தியாலயம் முதலாம் மற்றும் இரண்டாமிடங்களைப் பெற்றிருந்தது
Be First to Comment