போதைப்பொருளை பெற்றுக்கொள்வதற்காக தனது 15 வயது காதலியை நண்பர்களுக்கு விற்பனை செய்தார் என்ற குற்றச்சாட்டில் இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்தோடு, குறித்த சிறுமியை துஷ்பிரயோகம் செய்தார்கள் என்ற குற்றச்சாட்டில் பிரதான சந்தேக நபரின் 7 நண்பர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குருணாகல், மாவத்தகம பகுதியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி நிகவெரட்டிய பிரதேசத்தில் வசிப்பவராவார்.
இந்தச் சிறுமியின் தாயார் குடும்பத்தை விட்டுப் பிரிந்திருந்ததாகவும்,
சிறுமி தனது பாட்டியின் பாதுகாப்பில் வளர்க்கப்படுவதாகவும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
Be First to Comment