வயல் ஒன்றில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்த நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
அங்குருவத்தோட்ட வெனிவேல்பிட்டிய பிரதேசத்தில் வயல் ஒன்றின் வரப்பில் இரத்தக் காயங்களுடன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அங்குருவத்தோட்ட பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பொலிஸாரின் விசாரணைகளின் படி உயிரிழந்தவர் வெனிவெல்பிட்டிய ஹல்தோட்டை பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
இந்த சந்தேக மரணம் தொடர்பில் நீதவான் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன்இ சடலம் பிரேத பரிசோதனைக்காக ஹொரணை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை அங்குருவாதொட்ட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Be First to Comment