வட்டுக்கோட்டை இளைஞன் உயிரிழப்பு தொடர்பில் இலங்கைப் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி கொழும்பிலிருந்து விசேட பொலிஸ் குழு விசாரணைக்காக களம் இறக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதனிடம் வட மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் உறுதியளித்ததாக அங்கஜன் இராமநாதன் எம்.பி தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், வட்டுக்கோட்டை சம்பவம் தொடர்பில் தனக்கு தகவல் வழங்கப்பட்டதாகவும் தான் கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
குறித்த இளைஞனின் மரணம் தொடர்பான விசாரணை நீதியாக இடம்பெற தேவை ஏற்படின் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு விசாரணைக்காக அழைக்கப்படும் என தெரிவித்ததாக அங்கஜன் இராமநாதன் எம்.பி மேலும் தெரிவித்துள்ளார்.
Be First to Comment