Press "Enter" to skip to content

சித்தங்கேணி இளைஞனின் உறவினர்களிடம் கடிதம் கேட்டு மிரட்டிய பொலிஸார்!

இங்கு காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

யாழ். வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தின் நிலவரங்களை பார்வையிட்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே கனகரத்தினம் சுகாஷ் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

சித்தங்கேணி இளைஞனின் உறவினர்களிடம் கடிதம் கேட்டு மிரட்டிய பொலிஸார்! | Police Threat Youth Relatives Asking Letter Jaffna

 

அவர் மேலும் தெரிவித்ததாவது,

சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த உயிரிழந்த இளைஞனையும் அவரது நண்பரையும் பொலிஸார் காரணமில்லாமல் கைது செய்து சட்டத்திற்கு முரணாக பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து சித்தரவதை நடாத்தியிருக்கிறார்கள்.

அவர்களுக்கு உரிய முறையில் வைத்திய சிகிச்சைகள் அளிக்கப்படவில்லை. பின்னர் இவ் விடயங்களை வெளியே சொல்ல வேண்டாம் என அச்சுறுத்தி உள்ளார்கள். அது மாத்திரமில்லாமல் அந்த அச்சுறுத்தலின் விளைவாக தற்போது இளைஞனின் உயிர் பறிக்கப்பட்டிருக்கின்றது.

சித்தங்கேணி இளைஞனின் உறவினர்களிடம் கடிதம் கேட்டு மிரட்டிய பொலிஸார்! | Police Threat Youth Relatives Asking Letter Jaffna

 

அவரோடு கைது செய்யப்பட்ட மற்றைய இளைஞரும் சிறைச்சாலையில் இருக்கின்றார். அவருக்கும் காயங்கள் காணப்படுகிறது. அவரது குடும்பத்திடம் சென்று பொலிஸார் தாங்கள் அவரை தாக்கவில்லை என கடிதம் தருமாறு அச்சுறுத்தியிருக்கின்றார்கள்.

இவ் விடயங்களை நாங்கள் நாளை (20-11-2023) நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவர இருக்கின்றோம். இந்த இடத்தில் பாரிய ஒரு அச்சுறுத்தல் நிலவுகிறது. பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு பாரிய ஒரு அச்சுறுத்தல் ஏற்படுத்தப்படுகிறது.

இங்கே குற்றம் இழைத்ததும் பொலிஸார். அந்த குற்றத்தை விசாரிக்க போவதும் அதே பொலிஸார். ஊடகங்கள் இந்த வழக்கிற்கு முழுமையான ஆதரவை தர வேண்டும். அல்லது இந்த வழக்கின் உண்மைகள் குழி தோண்டி புதைக்கப்படலாம் என்றார்.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *