Press "Enter" to skip to content

பகட்டு மேனிக்கு பாதீட்டை எதிர்கிறாரா கஜேந்திர குமார்? – ஈ,பி.டி.பியின் ஊடக பேச்சாளர் ஶ்ரீரங்கேஸ்வரன் கேள்வி!

கடந்த 15 வருடகால வரவு – செலவு திட்டங்ளுடன் ஒப்பிடுகையில் சில முன்னேற்றகரமான விடயங்களும் 2024 ஆண்டுக்கான பாதிட்டில் உள்ளன. அவற்றை நாம் வரவேற்றுத்தான் ஆக வேண்டும் என தெரிவித்துள்ள அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சகட்ட மெனிக் அதை எதிர்ப்பதாக கூறியுள்ளமை வரவு செலவு திட்டத்தின் வலிமையை வெளியிபடுத்திக் காட்டுகின்றது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் ஊடக பேச்சாளரும் யாழ் மாவட்ட உதவி நிர்வாக செயலாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் இன்றையதினம் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போது கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது அவர் மேலும்  கூறுகையில் –

2024 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை கடந்த 13 ஆம் திகதி நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க சபையில் சமர்ப்பித்திருந்தார்.

அதில் வடக்கு கிழக்கு பிரதேசங்களுக்கு பல விசேட திட்டங்களை முன்மொளிந்திருந்தார். குறிப்பாக பூநகரி திட்டம் பாலியாறு குடிநீர் திட்டம் கடற்றொழிலாளர்களுக்கான விசேட ஒதுக்கீடுகள் நன்நீர் மீன்வளர்ப்பு மீள் குடியேற்றம் வீடமைப்புகு திட்டம் காணாமால் போனோருக்கான ஒதுக்கீடுகள் மற்றும் அரச ஊழியர்களுக்கான சம்பள அதிகரிப்பு என பல விடயங்களை உள்ளடக்கி இருந்ததை வரவேற்று பேசிய கஜேந்திரகுமார் சகட்டு மேனிக்காக இவ்வரவு செலவு திட்டத்தை எதிர்பதாகவும் கூறியுள்ளார்.

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக பல அரச உத்தியோகத்தர்கள் விடுமுறை பெற்று வெளிநாடுகளுக்கு தமது பொருளாதாரத்தை ஈட்டும் நோக்குடன் தொழில் ரீதியாக செல்கின்றனர்.

அதே போன்று தனியார் நிறுவனங்களிலும் பணிபரிபவர்கள் இவ்வாறு மத்தய கிழக்கு நாடுகளுக்கும் செல்கின்றனர்.

இந்த சூழலில் நாடு பெரும் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்ட நிலையில் பல நாடுகளின்  உதவிகளை எதிர்பார்த்து ஏங்கி நின்றவேளை இந்த நாட்டை தைரியமாக பொறுப்பேற்ற  இன்றைய ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க இந்த வரவு செலவு திட்டத்தை சமர்ப்பித்துள்ளார்.

ஆகவே இந்த வரவு செலவு திட்டம்  என்பது நாடு இருக்கின்ற பொருளாதார சுமை நாளாந்த செலவினங்கள் அனைத்தையும் ஒப்பீடு செய்து பார்க்கின்றபோது இவற்றை தெளிவுடன் புரிந்துகொண்ட மக்கள் இவ்வரவு செலவு திட்டத்தை மனப்பூர்வமாக விரும்புகின்றனர்.

முன்பதாக கடந்த நல்லாட்சி அரசில் நான்கு ஆண்டுகள் வரவு செலவு திட்டத்தை ஆதரித்தவர்கள் அதற்காக சலுகைகளை பெற்றவர்கள் அதிகாரம் பெற்றவர்களாக வலம்வந்தவர்கள் எல்லாம் இப்போது அரசியலை இலக்காக வைத்து எதிர்க்கின்றார்கள். நாம் ஜதார்த்த புரிந்துகொண்டே ஆதரிக்கின்றோம்.

நாடும் இல்லை வீடும் இல்லை என்ற நிலையில் நாட்டை துணிந்து பொறுப்பேற்ற ஜனாதிபதியின் இந்த வரவு செலவு திட்டத்தை கண்டிப்பாக எல்லோரும் ஆதரிப்பார்கள் என்பதே எதிர்பார்ப்பாக உள்ளத என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

More from UncategorizedMore posts in Uncategorized »

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *