பாராளுமன்றத்தில் ஏற்பட்ட அமைதியின்மையை அடுத்து 5 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட சபை அமர்வு 30 நிமிடங்களுக்குப் பின்னர் ஆரம்பமானது.
இதன் போது சபைக்குள் கையடக்க தொலைபேசிகளைப் பயன்படுத்தி புகைப்படம், வீடியோ எடுத்தல் மற்றும் நேரலை ஒளிபரப்பு போன்றவற்றை தவிர்க்குமாறு சபாநாயகர் உத்தரவிட்டார்.
அத்தோடு பாராளுமன்ற ஒழுங்கு விதிகளை மீறி செயற்படுவோருக்கு எதிராக கடும் நடபவடிக்கை எடுக்கப்படுமென அவர் மேலும் தெரிவித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆற்றிய உரையொன்றை ஆளுங்கட்சி எம்.பிக்கள் குழப்பி அவரின் ஆசனத்தை நோக்கிவந்து முற்றுகையிட்டதால் சபையை கட்டுப்படுத்த முடியாத நிலையில் சபை நடவடிக்கைகளை 5 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

பாராளுமன்றில் அமைதியின்மை: சபாநாயகரின் முக்கிய தடை உத்தரவுடன் சபை மீண்டும் ஆரம்பம்
More from UncategorizedMore posts in Uncategorized »
- கொடிய பயங்கரவாதி பிரபாகரனின் பிறந்தநாளை அனுஸ்டிக்க இடமளிக்க முடியாது..! எதிர்காலத்தில் கைதுகள் தொடரும்! – பாதுகாப்பு அமைச்சர் எச்சரிக்கை
- பருத்தித்துறை நீதிமன்றில்: நீதிமன்ற கடமைகளுக்கு இடையூறு செய்த பொலிஸ் அதிகாரிக்கு பிணை!
- தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது, ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பில் மீட்பு…தெல்லிப்பழை வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவர் கைது, ஹயஸ் வாகனம் புதுக்குடியிருப்பில் மீட்பு…
- உழவு இயந்திர கலப்பையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!
- உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் தற்கொலை
Be First to Comment