உழவு இயந்திரத்தின் கலப்பையில் சிக்குண்டு காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த மூன்றரை வயது குழந்தையொன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது.
வவுனியா நெடுங்கேணி பகுதியைச் சேர்ந்த சிவயோகநாதன் விந்துயன் என்ற குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
கடந்த 23ஆம் திகதி குறித்த குழந்தையின் தந்தை உழவு இயந்திரத்தின் சுழலக் கூடிய கலப்பையை வீட்டில் வைத்து இயக்கிக் கொண்டு இருந்தவேளை குழந்தை தடி ஒன்றினை கலப்பையினுள் வைத்துள்ளது.
இந்நிலையில் தடி கலப்பையினுள் இழுக்கப்பட்டபோது குழந்தையும் சேர்ந்து இழுபட்டதனால் கலப்பையில் சிக்குண்டு படுகாயமடைந்தது.
படுகாயமடைந்த குழந்தை ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, இறுதியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.
உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் நேற்றையதினம் ஒப்படைக்கப்பட்டது.

உழவு இயந்திர கலப்பையில் சிக்கி குழந்தை உயிரிழப்பு!
More from UncategorizedMore posts in Uncategorized »
Be First to Comment