நாட்டில் நிலவி வரும் கடும் வெப்பநிலையுடனான காலநிலை காரணமாக அதிகளவு நீர் பருகுமாறு மக்களுக்கு சர்வதேச சுகாதார ஆய்வு நிறுவனத்தின் போசாக்கு பிரிவு பிரதானி வைத்தியர் ரேணுகா ஜயதிஸ்ஸ அறிவுறுத்தல் விடுத்துள்ளார்.
வயது வந்தவர்கள் மூன்றரை லீட்டர் நீரும் சிறுவர்கள் ஒன்றரை லீட்டர் நீரும் நாளொன்றுக்கு பருக வேண்டுமென அறிவுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் தேசிக்காய் சாறு, தோடம்பழச்சாறு, தர்ப்பூசணி சாறு போன்ற பான வகைகளை பருக முடியும் எனவும்,
அதிக வெப்பநிலை காரணமாக உடலின் நீர்மட்டம் குறைவடையும் என்பதனால் அதிகளவு நீராகாரம் எடுத்துக்கொள்ள வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
வழமையை விடவும் அதிகளவு நீர் பருகுமாறும், வெய்யிலில் வேலை செய்யும் போது அவதானத்துடன் செயற்பட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.
Be First to Comment