இவ்வாண்டுக்கான பாதீட்டின் ஊடாகநிதி எமது மாவட்டத்திற்கும் கூடுதலான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை உச்ச பட்சமாக மக்களின் அவசிய தேவைகளுக்கு முன்னுரிமையின் அடிப்படையில் பயன் படைத்துவதையே தான் விரும்புவதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அதனை உறுதிப்படுத்த வேண்டிய தேவை அனைத்து தரப்பினருக்கும் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார்.
கரவெட்டி பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற பிரதேச அபிவிருத்திக் குழு கூட்டத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கரவெட்டி பிரதேச செயலாளரின் ஒழுங்கு படுத்தலில் மேற்படி கூட்டம் இடம்பெற்ற கூட்டத்தில் பன்முகப்படுத்தப்பட்ட வரவுசெலவுத் திட்டத்தின் ஊடக பிரதேசத்திற்கு ஒதுக்கப்படும் நிதி அதனூடாக மேற்கொள்ள திட்டமிடப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது
Be First to Comment