
உலக சனத்தொகையில் 1.9 பில்லியனுக்கும் அதிகமானோர் அதிக எடை கொண்டவர்கள், அவர்களில் 650 மில்லியன் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தேசிய நீரிழிவு மையத்தின் பிரதிப் பணிப்பாளரான சமூக மருத்துவ நிபுணர் சாந்தி குணவர்தன தெரிவித்தார். உலக உடல் பருமன் தினம் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 04 அன்று அதாவது இன்று கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டு கருத்து தெரிவிக்கும் போதே சமூக வைத்திய நிபுணர் சாந்தி குணவர்தன இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.” உலகளாவிய ரீதியில் உடல் பருமன் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. இதனால் ஏற்படும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. 1.9 பில்லியன் அதிக எடை கொண்டவர்கள் உள்ளனர். உலகில் 650 மில்லியன் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். உலக மக்கள் தொகையில் 39.% பேர் அதிக எடை கொண்டவர்கள். இந்நிலை இந்த நாட்டிலும் காணப்படுவதாக கலாநிதி சாந்தி குணவர்தன தெரிவித்தார்.“இலங்கையைப் பொறுத்தவரை, சுகாதார அமைச்சு உலக சுகாதார அமைப்புடன் இணைந்து, தொற்று அல்லாத நோய்களுக்கான ஆபத்து குழுக்களை அடையாளம் காண ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் ஒரு பரிசோதனையை நடத்துகிறது. 2005 இல் 18 முதல் 69 வயதுக்குட்பட்ட ஆண்களில் 24% அதிக எடை மற்றும் பருமனானவர்கள். இது 2021 இல் 30% ஆக அதிகரித்துள்ளது. அதே நேரத்தில், பருமன் மிக்க பெண்களின் தொகை 2015 இல் 34% இல் இருந்து 46.7% ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
Be First to Comment