Press "Enter" to skip to content

இந்த வருடத்தில் 3 % பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும்! -ஜனாதிபதி ரணில்

நாட்டின் பொருளாதாரம் 2023 ஆம் ஆண்டின் மூன்றாம் காலாண்டில் இருந்து மீள் எழுச்சி பெற ஆரம்பித்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் விசேட உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அத்துடன் , இந்த வருடத்தில் 2 சதவீதம் முதல் 3 சதவீதமான பொருளாதார வளர்ச்சியை எட்ட முடியும் என சர்வதேச நிதி நிறுவனங்கள் கணித்துள்ளதாகவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2023 ஆம் ஆண்டு அரச வருவாயை 50 சதவீத்திற்கும் மேல் அதிகரிக்க முடிந்ததாகவும் கடந்த வருடம் முதன்மைக் கணக்கில் உபரியைப் பெற முடிந்ததாகவும் தெரிவித்த ஜனாதிபதி, இதன்மூலம் மூன்று முதல் நான்கு ஆண்டுகளாக அரசாங்கத்திற்கு சேவை வழங்கிய ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை முழுமையாக செலுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
அழகிய வார்த்தைகள், வாக்குறுதிகளால் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகாண முடியாது, கடுமையான தீர்மானங்கள் ஊடாகவே நெருக்கடியில் இருந்து மீள முடியும் என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
மேலும், பொருளாதாரம் ஆரம்ப கட்ட ஸ்திரப்படுத்தலில் காணப்படுகிறது.
நாட்டு மக்களுக்கு தொடர்ந்து நிவாரணம் வழங்கப்படும் என்றும் ஜனாதிபதி கூறினார்.
புத்தகம், மருந்து பொருட்கள் உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட பொருட்கள் வற் வரி பட்டியலில் இருந்து நீக்கப்படும் என்றும் குறிப்பிட்டார்.
அத்துடன் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் நிவாரணம் வழங்கப் போவதில்லை என்றும் ஜனாதிபதி கூறினார்.
மத்திய வங்கி மற்றும் அரசாங்கம் ஆகியன ஒருங்கிணைந்து மேற்கொண்ட நுண் பொருளாதார கேள்வி முகாமைத்துவ முன்முயற்சியின் காரணமாக 2022 செப்டம்பரில் 70 வீதமாக இருந்த பணவீக்கம் 2024 பெப்ரவரியில் 5.9 வீதமாக வீழ்ச்சியடைந்தது.
இதன் காரணமாக சிறு மற்றும் மத்திய தொழில்முயற்சியாளர்களுக்கும் நுகர்வோருக்கும் நிவாரணம் வழங்கி 30 வீதத்தை தாண்டிய வரி வீதத்தை 2023 இல் 10 சதவீதத்தை விட குறைவான தொகைக்குக் கொண்டுவந்துள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *