Press "Enter" to skip to content

மகனின் மரணத்திற்கு பழிவாங்க எசிட் வீசிய தந்தை!

இரத்தினபுரி மேல் நீதிமன்ற வளாகத்திற்கு அருகில் இன்று (06) காலை சிலர் மீது எசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இந்த எசிட் வீச்சில் ஐந்து பேர் காயமடைந்து இரத்தினபுரி போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக “அத தெரண” செய்தியாளர் தெரிவித்தார்.

வாகன விபத்து தொடர்பான வழக்கு ஒன்றிற்காக வந்து கொண்டிருந்த நபர் ஒருவரை இலக்கு வைத்து இந்த எசிட் வீச்சு நடத்தப்பட்டுள்ளதுடன், அப்போது வீதியில் பயணித்த பெண் ஒருவரும் மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த ஆண்டு சிங்கள புத்தாண்டு தினத்தன்று இரத்தினபுரி சமன் தேவலாயத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தின் பிரதான சந்தேகநபர் மீதே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

குறித்த கார் விபத்தில் உயிரிழந்த இளைஞனின் தந்தையே இவ்வாறு எசிட் வீச்சை நடத்தியுள்ளதுடன் அவரை சந்தேகத்தின் பேரில் இரத்தினபுரி பொலிஸார் கைது செய்துள்ளனர்

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *