யாழில் தனது நண்பியின் காதலனுடன் தலைமறைவாகியுள்ளார் பட்டாதாரிப் பெண் ஒருவர். நல்லுார்ப் பகுதியில் இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த மே மாதமே குறித்த பட்டதாரிப் பெண்ணுக்கும் தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஆண் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. குறித்த பெண்ணுக்கு பெற்றோர் இல்லை எனத் தெரியவருகின்றது. திருமணமான சகோதரி மற்றும் உறவுகளுடன் வாழ்ந்து வந்த குறித்த பெண் திருமணத்தின் பின் கணவனுடன் தங்கியிருந்ததாக தெரியவருகின்றது. இந் நிலையில் குறித்த பட்டாதாரி மணப் பெண்ணை நேற்று முன்தினம் இருந்து காணவில்லை என கணவனும் பெண்ணின் உறவுகளும் தேடத் தொடங்கினர். பொலிசாரிடம் முறையிட ஆயத்தமான போது குறித்த பட்டாதாரிப் பெண் தான் இன்னொருவருடன் வாழத் தொடங்கியுள்ளதாகவம் கணவரிடமிருந்து விவாகரத்து வாங்கித் தருமாறும் தனது சகோதரிக்கு கூறியுள்ளார்.
இதே வேளை குறித்த பட்டதாரிப் பெண்ணுடன் தலைமறைவான காதலனுக்கு இன்னொரு காதலி உள்ளதாகவும் பட்டதாரிப் பெண்ணுடன் அவன் தலைமறைவாகியதால் அதிர்ச்சியடைந்த காதலி பெண்ணின் சகோதரி வீட்டில் வந்து அட்டகாசம் செய்துள்ளார். தன்னுடன் பல்கலைக்கழகத்தில் கற்ற நண்பியே தனக்கு துரோகம் செய்துவிட்டார் என பட்டதாரிப் பெண்ணின் சகோதரி வீட்டில் காதலி வந்து கத்திக் குளறியதாகத் தெரியவருகின்றது.
Be First to Comment