ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க கோரி துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்வு நேற்று (06) யாழ்ப்பாணம் திருநெல்வேலி பகுதியில் முன்னெடுக்கப்பட்டது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வாராஜா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிலர் கலந்து கொண்டு சந்தை திருநெல்வேலியில் புறநகர் பகுதிகள் ஆகியவற்றில் பொதுமக்களுக்கு துண்டு பிரசுரத்தினை வழங்கி ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு கூறினர்.
அத்துடன் ஜனாதிபதி தேர்தலில் பொது வேட்பாளர் நிறுத்துவதோ அல்லது பெரும்பான்மை இனத்தவர் ஒருவரை தெரிவு செய்வதில்லை எவ்வித பயனும் இல்லை என தெரிவித்த செல்வராஜா கஜேந்திரன் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிப்பது தமிழர்களுக்கு இருக்கின்ற ஒரே ஒரு தீர்வு எனவும் இதன்போது சுட்டிக்காட்டினார்.
Be First to Comment