யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு கொடுக்குளாய் ஆழியவளையிலுள்ள குடும்பஸ்தர் ஒருவரின் வீடு விசமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.
விஜயகுமார் குணேஸ் என்கின்ற தாளையடி தபால் நிலைய ஊழியரின் வீடே இவ்வாறு விசமிகளினால் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மனைவி மற்றும் ஒன்பது மாத குழந்தையுடன் குறித்த வீட்டில் வசித்து வரும் குடும்பஸ்தர், குடும்பத்துடன் வெளியில் சென்றபோதே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
இதனையடுத்து, சம்பவம் தொடர்பாக மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டுள்ளதுடன், அப்பகுதி கிராம சேவையாளருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் மருதங்கேணி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்
Be First to Comment