Press "Enter" to skip to content

பொதுஜன பெரமுனவின் வாக்குகள் ரணிலுக்கு! மேடையில் உறுதியளித்த எம்.பி

69 இலட்சம் பெற்ற பொதுஜன பெரமுனவின் வாக்குகள்  ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்குத் தான் கிடைக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ரணிலை ஆதரித்து நேற்று இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு  கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

ரணிலின் முயற்சி..

தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

வங்குரோத்தடைந்த நாட்டை மீட்டதாலே கட்சிக் கொள்கைகளையும் கட்சியையும் ஓரங்கட்டி உங்களுடன் கைகோர்த்தோம்.

நிறைவேற்று ஜனாதிபதியாக பொறுப்பேற்று 24 மணிநேரத்தில் வன்முறைகளை நிறுத்தி நாட்டை சுமூக நிலைக்கு கொண்டுவந்தார்.

பொதுஜன பெரமுனவின் வாக்குகள் ரணிலுக்கு! மேடையில் உறுதியளித்த எம்.பி | Sri Lanka Presidential Election 2024

 

வெளிநாட்டு தலைவர்களுடன் நாட்டை மீட்க நீங்கள் எடுத்த முயற்சிகளை நான் நேரில் கண்டிருக்கிறேன். உங்களை ஏற்று உலக நாடுகள் உங்களுக்கு உதவின.

ரணில் விக்ரமசிங்க என்ற பாத்திரத்தை மதிப்பதாலே அவர்கள் உதவினர். உங்கள் மீதான நம்பிக்கையில் தான் கடனை மீளச் செலுத்த கால அவகாசம் வழங்கின.

69 இலட்சம் பெற்ற பொதுஜன பெரமுனவின் வாக்குகள் உங்களுக்குத்தான் கிடைக்கும். தலதா மாளிகையை அழிக்க குண்டு வீசிய ஜே.வி.பிக்கு கண்டி மக்கள் யாரும் வாக்களிக்க மாட்டார்கள் என குறிப்பிட்டுள்ளார்.

 

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *