முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றும் அரச உத்தியோகத்தர் ஒருவர் நேற்று முன்தினம் (18) கைது செய்யப்பட்டுள்ளார்.
15 அகவை உடைய சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக முறைப்பாடு அளிக்கப்பட்ட நிலையிலேயே குறித்த உத்தியோகஸ்தர் கைதாகியுள்ளார்.
சம்பவத்தில் விசுவமடு கிழக்கினை சேர்ந்த 35 அகவையுடைய உத்தியோகஸ்தரே கைதாகியுள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுமி புதுக்குடியிருப்பு பொலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்தமைக்கு அமைவாக சந்தேகநபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மேலும் கைதான அரச உத்தியோகத்தரை புதுக்குடியிருப்பு பொலீசார் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்கள்.
Be First to Comment