நாட்டில் அமுல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் சரியான தன்மை மற்றும் மக்களுக்கு நன்மைகள் கிடைப்பதற்கு அரச அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டுமென பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் அதிகாரிகள் குழுவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே, பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தற்போது நடைமுறையில் உள்ள பல திட்டங்கள் கடனை அடிப்படையாகக் கொண்டே இயங்குவதாகவும், அந்தக் கடன்களை நாட்டு மக்களே செலுத்த வேண்டியிருப்பதால், அந்த வகையில் அதிகாரிகளுக்கு பொறுப்பு இருப்பதாகவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.
அத்தகைய அதிகாரிகளுக்கு எந்த நேரத்திலும் தற்போதைய அரசாங்கம் துணை நிற்கும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
2025ஆம் ஆண்டு முதல் நாட்டு மக்களுக்கான தேசிய சுதந்திர விழாவை நடத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஒடுக்கப்படாத வகையில் சுதந்திர தினத்தை ஏற்பாடு செய்ய வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
Be First to Comment