பிணக்குகளை தீர்ப்பாரானால் எதிர்காலத்தில் இணைந்து செயல்படுவது தொடர்பில் சிந்திக்க முடியும். ஆகவே இந்த தொழிற்சங்கங்களை அழைத்து கதைத்து அதற்குரிய தீர்வுகளை வடக்கு ஆளுநர் வழங்க வேண்டும் அதன் பின்னரே இதற்கான முடிவுகளை எட்ட முடியும்.
இலங்கை போக்குவரத்து சபையினுடைய யாழ் மத்திய பேருந்து நிலையத்தை முதலிலும் கையகப்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அதாவது மேலாக பாதையொன்றினை அமைத்து வைத்தியசாலையினுள் நுழையவும் கீழ்பகுதி பேருந்து நிலையமாகவும் மற்றும் கடைத் தொகுதிகளை அமைப்பது தொடர்பிலும் பேசப்பட்டது. பின்னர் அது கைவிடப்பட்டுள்ளது.
கொழும்பிலே மத்திய பேருந்து நிலையம் தனியார் பேருந்துகளுக்கு தனியாகவும் இலங்கை போக்குவரத்து சபையினருக்கு தனியாகவும் செயற்படுகின்றது. அதேபோல இங்கும் எமக்கான பேருந்து நிலையம் விசேடமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
தனியாருக்கு பேருந்து நிலையத்தை வழங்க முடியாது உங்களை அவர்களுக்காக கட்டப்பட்ட பேருந்து நிலையத்தில் செல்லுமாறு திணிப்பது எந்த விதத்திலும் நியாயமான ஒன்று அல்ல. ஆளுநருக்கு முறைப்பாடுகள் கிடைக்கப் பெறுகின்ற பொழுது அவர் அவ்வாறு செயற்படலாம்.
ஆளுநருடன் கதைக்கப்பட்ட சில விடயங்கள் இங்கே சுட்டிக்காட்டப்படாது செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன.
ஏற்கனவே வடமாகாண சபையின் முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் டெனிஸ்வரனால் தயாரிக்கப்பட்ட இணைந்த நேர அட்டவணை அமல்படுத்தப்படாது உள்ளது. கடந்த ஆட்சியில் அந்த நேர அட்டவணையும் பிழையென கூறி எமது தரப்பினர் சிலர் இணைந்து இணைந்த நேர அட்டவணையை தயாரித்திருந்தனர். அதுவும் நடைமுறைப்படுத்தப்படாது உள்ளது.






Be First to Comment