Press "Enter" to skip to content

தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினரை பயங்கரவாத விசாரணை பிரிவுக்கு அழைப்பு

முல்லைத்தீவில் வசித்து வரும்  இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் ஒருவரை பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவிற்கு வருமாறு பயங்கரவாத விசாரணை பிரிவினரால் இன்று (29) அழைப்பாணை வழங்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு – மணல் குடியிருப்பு பகுதியில் வசித்து வரும் இலங்கை தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர் பீற்றர் இளஞ்செழியன் என்பவரையே எதிர்வரும் 01.02.2025 ஆம் திகதி அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவிற்கு சமூகமளிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு அனுப்பப்பட்டுள்ள அழைப்பாணையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு அமைவாக வாக்குமூலம் ஒன்றினை பெற்றுக் கொள்வதற்காக கீழ் குறிப்பிடப்படும் நபரினை ஒன்று 01.02.2025 ஆம் திகதி காலை 10 மணிக்கு அளம்பில் பொலிஸ் நிலையத்தில் அமைந்திருக்கும் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணை பிரிவின் முல்லைத்தீவு உப பிரிவிற்கு வருகை தருமாறு மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *