Press "Enter" to skip to content

மகிந்த ராஜபக்சவை வீட்டிலிருந்து வெளியேற்ற மக்கள் கடிதம் அனுப்பலாம்! – அரசு அறிவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசிப்பதற்கு பொருத்தமான வீடு ஒன்றை தேடி வருவதாக அமைச்சரவை பேச்சாளரும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மகிந்த ராஜபக்சவின் வயதுக்கு பொருத்தமான வகையில் இரண்டு பேருக்கு பயன்பாட்டுக்கு தேவையான சதுர அடிகளை கொண்ட வீடு ஒன்றை அரசாங்கம் தேடி வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

கடிதம் ஒன்றை அனுப்பினால் வீட்டை விட்டு வெளியேறுவேன் என மகிந்த கூறுவது, அவ்வாறான கடிதம் அனுப்பினால் செல்ல நேரிடும் என்பதை அறிந்து கொண்டேயாகும் என சுட்டிக்காட்டியுள்ளார்.

கடிதங்கள் அனுப்பி வைக்கப்படும் வரையில் காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

நாங்கள் கடிதங்களை அனுப்பி வைக்க வேண்டியதில்லை எனவும், மக்கள் கடிதங்களை அனுப்பி வைக்க முடியும் எனவும் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவரது சகோதரர் கோட்டபய ராஜபக்சவிற்கு கடிதம் இல்லாமல் தனது இல்லத்தை விட்டு வெளியேறு முடியுமானால், இவர் ஏன் அதற்காகக் காத்திருக்கிறார் என அமைச்சர் கேள்வியேழுப்பினார்.

Be First to Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *